உள்ளூர் செய்திகள்
.

கம்பைநல்லூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மாணவர்

Published On 2022-01-27 06:46 GMT   |   Update On 2022-01-27 06:46 GMT
கம்பைநல்லூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மொரப்பூர்:

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது சொர்ணம்பட்டி இந்த கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது.


இந்த கோவிலில் நேற்று நள்ளிரவு கடப்பாரையால் இடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது சுமார் 20- வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில் இருந்த கடப்பாரையை கீழே போட்டுவிட்டு உண்டியலில் இருந்த ரூ.3ஆயிரம் பணத்தினை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

தப்பி ஓடிய வாலிபரின் மோட்டார் சைக்கிள் குறித்து விசாரித்தனர். இதில் அந்த வாலிபர் கே.ஈச்சம்பாடியை சேர்ந்த பிரவீன் (வயது 19)- என்பதும் இவர் கடத்தூர் பகுதி யில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2&ம¢ ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரி மாதப்பன் என்பவர் கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய பிரவீனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாலி டெக்னிக் கல்லூரி மாணவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News