உள்ளூர் செய்திகள்
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள வெற்றிலை கட்டுகள்.

உடன்குடியில் வெற்றிலை உற்பத்திக்கு மானிய கடன்-விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-01-25 09:48 GMT   |   Update On 2022-01-25 09:48 GMT
உடன்குடி பகுதியில் வெற்றிலை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு அரசு மானிய கடன், மானிய உரம் என பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதியில்வெற்றிலை விவசாயம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வெள்ளாளன்விளை, சீர்காட்சி, பரமன்குறிச்சி பகுதியில் மட்டுமே நடக்கிறது. 

உடன்குடி பகுதிக்கு தேவையான வெற்றிலைகள் ஆத்தூரில் இருந்து வருகிறது. உடன்குடி வெற்றிலை விவசாய சங்கத்தில்ஒரு கிலோ எடையுள்ள வெற்றிலை ரூ.182-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தற்போது திருமணம் மற்றும் விசேஷ காலங்கல் அதிகமாக உள்ளதாலும், மழை நீரில் முழ்கி வெற்றிலை அழிந்து விட்டதாலும் இந்த விலைக்குவிற்பனை செய்யப்படுகிறது. 

பழைய காலங்களைப் போல யாரும் அதிகமாக வெற்றிலையை பயன்படுத்துவதில்லை.அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெற்றிலையை பயன்படுத்துவதாலும்  சம்பிரதாயத்திற்கு மட்டுமே பூஜையில் பயன்படுத்துகின்றனர்.

தாம்பூல கவரில் வெற்றிலைக்கு பதில் இனிப்பு, பழங்கள், பாத்திரங்கள் பயன்படுத்துவதால் வெற்றிலை பயன்பாடு குறைந்து விட்டது. 

ஆனால்உற்பத்தி செலவு அதிகமாக வருவதால் விற்பனைவிலை கட்டுப்படி ஆகவில்லை. அதனால் உற்பத்தியும் குறைந்தது விட்டது. 

வெற்றிலை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு அரசு மானிய கடன், மானிய உரம் என பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
Tags:    

Similar News