உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விதிகளை மீறி இயங்கிய இறைச்சி கடைகள் - ஓட்டல்கள்

Published On 2022-01-24 05:59 GMT   |   Update On 2022-01-24 05:59 GMT
கரூரில் விதிகளை மீறி இறைச்சி கடைகள் மற்றும் ஓட்டல்கள் இயங்கின
கரூர்:

கரூர் மாவட்டத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பேருந்துகள் இயங் காததால் கரூர், குளித்தலை, பள்ளபட்டி,  அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், தோகைமலை ஆகிய பேருந்து நிலை யங்களில் கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டிருந்தன. மேலும் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் வருகையின்றி பேருந்து நிலையங்கள் வெறிச் சோடி காணப்பட்டன.

கரூர் மாநகரில் ஜவஹர் பஜார், கோவை சாலை, மேற்கு மற்றும் வடக்கு பிர தட்சணம் சாலைகள், பழைய புறவழிச்சாலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோணிமலை, காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகள், மாவட்டத்தில் பள்ளபட்டி, குளித்தலை, வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம், தோகைமலை, தரகம்பட்டி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகள்  மூடப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள் வெறிச்சோடின.

ஓட்டல்களில் பார்சல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. உணவுகளை டெலிவரி செய்யும்  நிறுவன ஊழியர்கள் அதிகளவில் 2 சக்கர வாகனங்களில் ஓட்டல்களிலிருந்து உணவுகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கரூர் சுங்கவாயில், திருமாநிலையூர், லைட்ஹவுஸ், சர்ச் முனைகள், பேருந்து நிலைய ரவுண்டானா, திருமாநிலையூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து  வாகன சோதனைகளை மேற்கொண்டனர். மருத்துவமனைகள், மருந்தகங்கள், பாலகங்கள், பெட்ரோல் பங்க்குகள், ஏடிஎம்கள், ஹோட்டல்கள் ஆகியவவை செயல் பட்டன. ரெயில்கள் வழக்கம்போல இயங்கின.

கரூரில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவே இறைச்சிகள் டோர் டெலிவரி செய்யப்பட்டன. கரூரில் ஒரு சில இறைச்சி கடைகள் விதிகளை மீறி திறந்து இறைச்சி விற்பனை  நடைபெற்றது. பார்சல் உணவு விற்பனை செய்யப்படும் உணவு விடுதியில் காபி விற்பனை  நடைபெற்றது. கிராமப்பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் வழக்கம் போல செயல்பட்டன.
Tags:    

Similar News