உள்ளூர் செய்திகள்
தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் கூட்டம் நடந்த காட்சி.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. ஆலோசனை

Published On 2022-01-22 10:13 GMT   |   Update On 2022-01-22 10:13 GMT
சாத்தான்குளம் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பேரூராட்சியில்  நகர்புற உள்ளாட்சி  தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக  ஒன்றிய , நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம்    நடைபெற்றது. 

 தூத்துக்குடி  தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  சண்முகநாதன்  தலைமை தாங்கி, பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும்  கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற  செய்து பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்க பாடுபடவேண்டும்.  கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் பாடு பட வேண்டும் என்றார். 

மாவட்ட அவைத் தலைவர் திருபாற்கடல், ஒன்றிய அ.தி.மு.க. செயலர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலர் குமரகுருபரன் வரவேற்றார். 

இதில் ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவபாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை  செயலர் பொன்பாண்டி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர் பாலமேனன், தலைவர் சின்னத்துரை, முன்னாள் ஒன்றிய  கவுன்சிலர் கார்த்திஸ்வரன், ஒன்றிய பாசறை துணைத் தலைவர் கண்ணன்,  வார்டு செயலர்கள் சரவணன், பால்பாண்டி, ஈஸ்வரன், மணி, பேச்சிமுத்து, மருதமலைமுருகன், விஜயராமபுரம் சண்முகநாதன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் முன்ளாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் திட்டங்கள், சாதனைகளை எடுத்து கூறி வீடு, வீடாக வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றியை  பெற அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஒன்றிய துணை செயலர் சின்னத்துரை நன்றி கூறினார்.
Tags:    

Similar News