உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் கொரோனா கண்காணிப்பு சிறப்பு அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-01-21 09:03 GMT   |   Update On 2022-01-21 09:03 GMT
கோவை மாநகராட்சி 100 வார்களிலும் கொரோனா தடுப்பு பணி நடக்கிறது.
கோவை:

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்து வதற்காக அரசு சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

நேற்று ஒரே நாளில் 390 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து நோய்த்தொற்றை தடுப்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை மாநகராட்சி சார்பாக தினந்தோறும் சுமார் 4000 பேருக்கு பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் என அனைவரையும் கண்காணிக்க சிறப்பு குழுக்கள், மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கோவை மாநகராட்சியை நோய் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்று வதற்கு 100 வார்டுகளிலும், 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் 33 சிறப்பு அதிகாரிகளும், 7 நகராட்சிகளுக்கு 7 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து சிறப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சி சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்வது, தேவையான உதவிகள் செய்து, தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது, உள்ளிட்ட பணிகளை சரிவர செய்கிறார்களா? என நாங்கள் தினம்தோறும் ஆய்வு மேற்கொள்வோம். 

தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு செல்ல விரும்பு பவர்கள் அரசு ஆம்பு லன்சில் செல்கிறார்களா, தனியாக வாகனத்தில் எதுவும் செல்கிறார்களா எனவும் கண்காணிப்போம்.

உதவி தேவைப்படும் வார்டு மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றவாறு உயர் அதிகாரிகளிடம் தகவல் கூறுவது, தினந்தோறும் அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News