நெல்லை மாவட்டத்தில் 14-ந்தேதி முதல் வருகிற 18-ந்தேதி வரை தொடர்விடுமுறையையொட்டி மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு
பதிவு: ஜனவரி 16, 2022 11:48 IST
கோப்புப்படம்
நெல்லை:
தமிழகம் முழுவதும் கடந்த 14-ந்தேதி முதல் வருகிற 18-ந்தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நாட்களில் பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்கிடும் விதமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மண்டல தலைமை அலுவலகத்தில் மின்தடை ஏற்பட்டால் கணினி மூலம் மாற்று வழியில் மின் இணைப்பு ‘ஸ்காடா’ வழங்கும் அலுவலகத்திலும், உப மின் நிலையங்களிலும், பிரிவு அலுவலகங்களிலும், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிபுரிந்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி வருகின்றனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் 94987 94987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.