உள்ளூர் செய்திகள்
தேரிருவேலி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை இயக்குநர் சுரேஷ் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரத்தில் காச நோயாளிகளுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை

Published On 2022-01-07 11:39 GMT   |   Update On 2022-01-07 11:39 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் காச நோயாளிகளுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று காசநோய் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், தேரிருவேலி, திருவரங்கம், கீழத்தூவல் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட காசநோய் துணை இயக்குநர் ரமேஷ்  ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் கூறியதாவது:- 

ராமநாதபுரம் மாவட் டம்  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி யாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் காச நோயாளிகளை கண்டறிந்து வீடு தேடி சென்று இலவச மாக மருந்து, அரசு உதவித் தொகை  தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காச நோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.   தொடர் இருமல், காய்ச்சல், உடல் எடை குறைதல் உள்ளவர்கள் காசநோய் பரிசோதனை செய்ய  வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காச நோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது வாகித், தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் காசி, காசநோய் முதுநிலை மேற்பார்வையாளர் மோகனபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News