உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மிளகாய் பொடியை வீசி பெண்ணிடம் நகை பறிப்பு

Update: 2022-01-07 10:56 GMT
குளித்தலை அருகே பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி 6 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலையைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி பிரதீபா (வயது 29). இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். 

அப்போது 2 சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் பிரதீபாவை பின் தொடர்ந்து வந்தனர். இதனை அவர் கவனிக்கவில்லை.

திடீரென்று அந்த நபர்கள் பிரதீபாவின் முகத்தில் மிளகாய் பொடியை வீசினர். இதில் நிலைகுலைந்த அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் வாகனத்தில் தப்பினார்.

இதுகுறித்து குளித்தலை போலீசில் பிரதீபா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News