உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

Update: 2022-01-02 09:11 GMT
கோவையில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது
கோவை:

கோவை கருமத்தம்பட்டி கணியூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 22). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி (18). இவரும் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

இவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.  இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள சிவரஞ்சனியின் அண்ணன் மனைவிக்கு   குழந்தை பிறந்தது. 

அந்த குழந்தையை பார்க்கச் செல்லலாம் என சிவரஞ்சனி தனது கணவரிடம் கேட்டு வந்துள்ளார்.ஆனால் அவர் அதற்கு மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

சம்பவத்தன்று மீண்டும் அதுகுறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது கோபமடைந்த சின்னசாமி, சிவரஞ்சனியை கண்டித்து வீட்டை விட்டு வெளியே சென்றார்.

 வீட்டில் இருந்த சிவரஞ்சனி மனவேதனையுடன் இருந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி வந்து வீட்டின் கதவை வெகு நேரமாக தட்டினார். அவர் கதவை திறக்காததால் அந்த சிறுமி அருகில் உள்ள அவரது உறவினரிடம் சென்று கூறினார். 

அவரும் கதவைத் தட்டி திறக்காததால ஜன்னலை திறந்து பார்த்தார். 

அப்போது சிவரஞ்சனி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந் தார். பின்னர் இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

 இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News