உள்ளூர் செய்திகள்
மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.

பல்லடம் அரசு பள்ளிக்கு கட்டிட வசதி கோரி மனு

Published On 2021-12-27 10:20 GMT   |   Update On 2021-12-27 10:20 GMT
பல்லடம் அண்ணா நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 2018ம் ஆண்டு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
திருப்பூர்:

பல்லடம் அண்ணாநகர் அரசு பள்ளிக்கு கட்டிட வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பல்லடம் அண்ணா நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 2018 ம் ஆண்டு நடுநிலை பள்ளியாக  தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  தற்போது பள்ளியில் 5 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது.

மற்ற கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளதால் அங்கு வகுப்பறைகள் செயல்படவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர்களும் அவதி அடைகின்றனர்.

மேலும் மழை, வெயில் காலங்களில் வகுப்புகள் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போதிய கழிப்பிட வசதியும் இல்லாத காரணத்தால் மாணவ-, மாணவிகள் ஒரே கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளிக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டவும், கழிப்பறை வசதி செய்து தரவும் வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News