உள்ளூர் செய்திகள்
தக்காளி

தொடர்ந்து உயரும் தக்காளி விலை: இன்று சென்னையில் 130 ரூபாய்க்கு விற்பனை

Published On 2021-12-08 02:09 GMT   |   Update On 2021-12-08 02:09 GMT
கனமழை மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைவு ஆகியவற்றின் காரணமாக தக்காளி விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
வங்கக் கடலில் உருவான அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. அதேபோல் வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது. மேலும், மழை காரணமாக தக்காளி செடிகள் அழுகியதால் தக்காளி சாகுபடி குறைந்தது.

இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டிலேயே 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் சற்று விலை குறைய ஆரம்பித்தது.

ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மேலும் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை கோயம்பேட்டில்  தக்காளி சில்லரை விலையில் 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மீண்டும் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
Tags:    

Similar News