செய்திகள்
தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவை ரத்து

தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவை ரத்து: கடற்கரை-எழும்பூர் இடையேயும் ரத்து

Published On 2021-11-07 07:11 GMT   |   Update On 2021-11-07 07:11 GMT
மழை வெள்ளம் வடிவதைப் பொறுத்துத்தான் கடற்கரை- எழும்பூர் இடையேயான வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மழை தண்ணீர் பல இடங்களில் தேங்கி வடியாத நிலையில் உள்ளது.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் சில இடங்களில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் சூழ்ந்தது. சிறிது நேரம் மெதுவாக ரெயில்கள் இயக்கப்பட்டன.

தொடர்ந்து வெள்ளத்தின் அளவு அதிகரித்ததால் ரெயில்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து காலை 10.30 மணியளவில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் எழும்பூரில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழித்தடத்தில் தண்டவாளத்தை வெள்ளம் சூழ்ந்தது.

மின்சார ரெயில்களை இயக்க முடியாததால் காலை 9.15 மணி முதல் கடற்கரை- எழும்பூர் இடையேயான மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.


இதனால் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு மின்சார ரெயில்கள் புறப்படவில்லை. தாம்பரத்தில் இருந்து வந்த ரெயில்களும் எழும்பூரில் நிறுத்தப்பட்டது. மழை வெள்ளம் வடிவதைப் பொறுத்துத்தான் இந்த வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News