செய்திகள்
சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால்

7,800 குற்றவாளிகள் பேஸ் செயலி மூலம் கண்காணிப்பு- போலீஸ் கமி‌ஷனர் தகவல்

Published On 2021-10-24 09:46 GMT   |   Update On 2021-10-24 09:46 GMT
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மற்றும் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருவதாக போலீஸ் கமி‌ஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னையில் இன்று மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி போர் நினைவுச் சின்னம் அருகில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் தீபாவளி பாதுகாப்பு தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளியையொட்டி குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மற்றும் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம்.

குற்றவாளிகளை அடையாளம் காணும் ‘பேஸ் டிடெக்‌ஷன் சாப்ட்வேர்’ மூலம் சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News