செய்திகள்
தாராபுரம் பகுதியில் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் வினீத் கேட்டறிந்த காட்சி.

வளர்ச்சி பணிகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்-கலெக்டர் உத்தரவு

Published On 2021-10-24 08:28 GMT   |   Update On 2021-10-24 08:32 GMT
ஆய்வின் போது அடிப்படை வசதிகள் ,மின்சார வசதி,குடிநீர் வசதிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
தாராபுரம், 

திருப்பூர் கலெக்டர் வினீத் தாராபுரம் நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் தெரு,காமன் கோவில் தெரு,காமராஜபுரம்,அட்டவணை மஜித் தெரு ,ஜின்னா மைதானம், கோட்டைமேடு,அலங்கியம் ரோடு, டாக்டர் நகர்,பார்க்ரோடுபகுதியில் பொதுமக்களை சந்தித்து அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என நேரில் சென்று ஆய்வு நடத்தினர். கழிப்பிடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை அறிந்து நகராட்சி நிர்வாகத்திற்கு அதை சரி செய்யுமாறு அறிவுரை வழங்கினார். 

இந்த ஆய்வின் போது அடிப்படை வசதிகள், மின்சார வசதி, குடிநீர் வசதிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் அடித்தட்டு மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றும் போது முன்னுரிமை அளிக்க வேண்டுமென நகராட்சி என்ஜினீயர் ராமசாமிக்கு ஆலோசனையை கலெக்டர் வழங்கினார். 

கலெக்டர்ஆய்வின்போது தாராபுரம் தாசில்தார் சைலஜா, ஆர்.ஐ. துர்க்கைராஜ் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News