செய்திகள்
சஸ்பெண்டு

திருச்சி ஆவின் அதிகாரி பணியில் இருந்து முன்னாள் அமைச்சர் மகன் சஸ்பெண்டு

Published On 2021-10-20 10:27 GMT   |   Update On 2021-10-20 10:27 GMT
பணியின் போது அலட்சியமாக இருந்ததாகவும், தனது பொறுப்பில் இருந்து தவறியதற்காகவும் திருச்சி ஆவின் பொறியாளர் மேலாளரை ‘சஸ்பெண்ட்’ செய்து ஆவின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி:

திருச்சி ஆவின் பாலகத்தில் 5 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பாய்லர் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த வாரம் அந்த பாய்லர் திடீரென பழுதாகியது.

அதனை பராமரித்து பழுது பார்க்கும் பொறுப்பு பொறியாளர் மேலாளர் ஹரிராமிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பாய்லர் ரிப்பேராகிய நிலையில் பொறியாளர் மேலாளர் ஹரிராம் 2 நாட்கள் விடுமுறையில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பணியின் போது அலட்சியமாக இருந்ததாகவும், தனது பொறுப்பில் இருந்து தவறியதற்காகவும் திருச்சி ஆவின் பொறியாளர் மேலாளர் ஹரிராமை ‘சஸ்பெண்ட்’ செய்து ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்டு செய்யப்பட்ட பொறியியல் மேலாளர் ஹரிராம் அ.தி.மு.க. முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், முன்னாள் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வளர்மதியின் இரண்டாவது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News