செய்திகள்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

கூலி உயர்வு பேச்சுவார்த்தை இழுபறி-போராட்டத்திற்கு ஆயத்தமாகும் விசைத்தறியாளர்கள்

Published On 2021-09-29 08:38 GMT   |   Update On 2021-09-29 08:38 GMT
ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கூலி உயர்வு குறித்து இதுவரை 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பல்லடம்:

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைசெயலாளர் பாலாஜி வரவேற்றார். இதில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கூலி உயர்வு குறித்து இதுவரை 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. கூலி உயர்வு பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாமல் காலதாமதம் ஆகி வருகிறது.

இதனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பு ஓரிரு வாரங்களில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்க திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதில் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கி அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் துணைத்தலைவர்கள் பரமசிவம்,சக்திவேல், துணை செயலாளர் நாச்சிமுத்து, நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகசாமி, பொன்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News