செய்திகள்
சிலம்பம்-களரி இலவச பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்.

தற்காப்பு பயிற்சியை கற்று கொள்வதால் தன்னம்பிக்கை ஏற்படும்-உடுமலை டி.எஸ்.பி., அறிவுரை

Published On 2021-09-12 08:32 GMT   |   Update On 2021-09-12 08:32 GMT
கலைகளை கற்றுக்கொள்வதால் அவர்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவும் என உடுமலை டி.எஸ்.பி., அறிவுறுத்தி உள்ளார்.
உடுமலை:

உடுமலை உழவர் சந்தைஎதிரே உள்ளமுழுநேர கிளைநூலகம் எண் 2  நூலக வாசகர் வட்டம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக பகத் சிங் சிலம்பம் களரி மார்ஷியல்ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆசான் வீரமணி மேற்பார்வையில் சிலம்பம் களரி இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் தேசிய மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் பெற்று உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சிலம்பம் மற்றும் களரி பயிற்சிகள் மீண்டும்  தொடங்கப்பட்டு உள்ளது.

உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில் நடந்த சிலம்ப பயிற்சி வகுப்பு துவக்க விழாவிற்கு நூலகர் கணேசன் தலைமை வகித்தார்  அறக்கட்டளை பொருளாளர் ராதா வீரமணி வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார், பொருளாளர் சிவகுமார் மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி காப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து மாணவர்கள் இது போன்ற தற்காப்பு பயிற்சியை கற்றுக் கொள்வதால் தன்னம்பிக்கை ஏற்படும்.

மேலும் தாங்கள் இதுபோன்ற கலைகளைக் கற்றுக் கொள்வதால் அவர்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவும். எனவே இது போன்ற பாரம்பரிய கலைகளை மாணவர்கள் கற்க முன்வர வேண்டும் என்றார்.

தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை மக்களிடையே  ஏற்படுத்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட கொண்ட பதாகைகள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் மற்றும் வாசகர் வட்டம் பொறுப்பாளர்கள் மற்றும் பகத்சிங் சிலம்பம் களறி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளைஆசான் சு.வீரமணி ஆகியோர் செய்திருந்தினர்.
Tags:    

Similar News