செய்திகள்
குடிநீர் குழாய்.

திருமுருகன்பூண்டி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை-அதிகாரி எச்சரிக்கை

Published On 2021-08-30 07:05 GMT   |   Update On 2021-08-30 07:05 GMT
திருமுருகன்பூண்டியில் அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகளை முறைப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
அவினாசி:

திருப்பூர் திருமுருகன்பூண்டி பேரூராட்சி சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் பேரூராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் நிர்வாக அனுமதியின்றி தன்னிச்சையாக போடப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பிரத்யேக கமிட்டி அமைக்கப்பட்டு அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் கண்டறியும் பணி நடந்தது. 500 இணைப்பு வரை கண்டறியப்பட்டு வரைமுறைப்படுத்தப்பட்டன.  

இதன் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை வருமானமும் ஈட்டப்பட்டது. 
தற்போது மீண்டும் பணியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அனைத்து வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், பேரூராட்சியின் அனுமதியின்றி தன்னிச்சையாக தனியார் குழாய் இணைப்பு அமைத்திருந்தால் அவற்றை தாமாகவே முன்வந்து பேரூராட்சி அலுவலகத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள் உரிய கட்டணங்களை செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தவறும்பட்சத்தில் மேல் நடவடிக்கை தொடரப்படுவதுடன் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும்‘ என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் கூறுகையில், அனுமதியற்ற குடிநீர் இணைப்பை முறைப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News