செய்திகள்
கைது

கள்ளக்குறிச்சியில் 29 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது

Published On 2021-07-29 11:11 GMT   |   Update On 2021-07-29 11:11 GMT
கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் கச்சேரி சாலையில் வாகன சோதனை செய்தனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடை செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் கச்சேரி சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் கள்ளக்குறிச்சி ஆண்டாள் நகர் பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் வயது 40 என்பதும் தனது கடைக்கு விற்பதற்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடமிருந்து 16 கிலோ 600 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து திலீப்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அவருடன் வந்த பெரியசாமி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 36) என்பதும், இவர் சுமார் 12 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News