செய்திகள்
கோப்புபடம்

வீணாகும் பனம்பழங்கள் சேகரிக்கப்படுமா?

Published On 2021-07-15 08:55 GMT   |   Update On 2021-07-15 08:55 GMT
சீசன் சமயங்களில் கீழே விழுந்து வீணாகும் பனம்பழங்களை சேகரித்து விதைகளாக மேம்படுத்த இருப்பு வைக்கலாம்.
உடுமலை:

உடுமலை அருகே அடுக்குத்தொடராக அமைந்துள்ள 7 குள பாசன திட்ட குளங்கள் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் பனை மரங்களின் பாதுகாப்பிடமாகவும் திகழ்கிறது. பல்வேறு பலன்களை தரும் பனை மரங்களை பாதுகாக்க பெரியகுளம் உள்ளிட்ட குளங்களில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளையில் பொதுப்பணித்துறை சார்பில் செங்குளம் உட்பட அனைத்து குளங்களின் கரைகளில் உள்ள பனைமரங்கள் வெட்டப்படுவதை தடுக்க அவற்றின் எண்ணிக்கையை கொண்ட தகவல் பலகையை வைக்க வேண்டும். மேலும் சீசன் சமயங்களில் கீழே விழுந்து வீணாகும் பனம்பழங்களை சேகரித்து விதைகளாக மேம்படுத்த இருப்பு வைக்கலாம். இதனால் அடுத்த சீசனில் நடவுக்கு தேவையான விதைகள் கிடைக்கும். தற்போது செங்குளம் பகுதியில் பனம்பழங்கள் கீழே விழுந்து வீணாகி வருகின்றன. அவற்றை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் பொதுப்பணித்துறை சேகரித்து பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News