செய்திகள்
கோப்புபடம்

பெருமாநல்லூர் ஊராட்சி தலைவர்-உறுப்பினர்கள் கலெக்டரிடம் மாறி மாறி புகார்

Published On 2021-06-16 07:51 GMT   |   Update On 2021-06-16 07:51 GMT
சில உறுப்பினர்கள் வியாபாரிகளிடம் மிரட்டி பணம் பறிக்கின்றனர். இரவு நேர பாரில் பணம் வாங்கிக்கொள்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலெக்டரிடம் மாறி மாறி புகார்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஊராட்சி தலைவர் சாந்தாமணி, ஊராட்சி பணியை செய்யவிடாமல் தடுத்து வன்முறையை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில், ஊராட்சி தேர்தலில் பெருமாநல்லூர் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்.

எனது கணவர் வேலுசாமி துணை தலைவராக தேர்வானார். சிலர் குழப்பம் செய்ததால் துணை தலைவருக்கான ‘செக் பவர்’ வேறு உறுப்பினருக்கு வழங்கப்பட்டது. சில உறுப்பினர்கள் வியாபாரிகளிடம் மிரட்டி பணம் பறிக்கின்றனர். இரவு நேர பாரில் பணம் வாங்கிக்கொள்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி பணியின் போது தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமென இடையூறு செய்கின்றனர். ஊராட்சி பணிகள் ஆய்வின் போது பணியாளர்களுடன் பேசுவதை வீடியோ எடுத்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இவ்வாறு ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுத்து வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஊராட்சி தலைவர், துணை தலைவர்  மீது உறுப்பினர்கள்  புகார் தெரிவித்துள்ளனர். உறுப்பினர்கள் கூறுகையில், வள்ளலார் சமூக சேவை மையம் சார்பில் ஒரு மாதமாக மக்களுக்கு 100 உணவு பொட்டலம் வழங்கப்படுகிறது. ஊராட்சி தலைவர், துணைதலைவர் ஆகியோர்  அதனை வாங்கி  உடன் இருப்பவர்களுக்கு வழங்கி விடுகின்றனர். 

தடுப்பூசி முகாமில் கட்சியினர் மற்றும் ஊராட்சி தலைவரின் உறவினருக்கு மட்டும் ஊசி போடுகின்றனர். அதுகுறித்து கேட்டதற்கு தரக்குறைவாக பேசுகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி  கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்றனர்.
Tags:    

Similar News