செய்திகள்
போலீசார் சார்பில் ஏழை குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.

ஊரடங்கால் தவிக்கும் ஏழை மக்களுக்கு போலீசார் உதவி

Published On 2021-06-03 07:40 GMT   |   Update On 2021-06-03 12:39 GMT
திருப்பூரில் ஊரடங்கால் தவிக்கும் ஏழை மக்களுக்கு போலீசார் உணவு மற்றும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
திருப்பூர்:

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக  திருப்பூரில் சாலையோரம் வசிக்கும்  ஆதரவற்ற முதியவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதையடுத்து அவர்களுக்கு தன்னார்வலர்கள் தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.

இதேப்போல் போலீசாரும் உதவிகள் செய்கின்றனர். அதன்படி திருப்பூர் மாவட்ட காவல்துறை அதிகாரி ஜோதிமணி,  சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு  தினந்தோறும் இலவச உணவு பார்சல்களை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு ஊரடங்கின் போதும்  அவர் உணவு வழங்கினார்.

திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்  முயற்சியின்படி ஏழை- எளிய பொதுமக்களை கண்டறிந்து அவர்களது வீடுகளுக்கு போலீசார்  நேரடியாக சென்று அரிசி, பருப்பு, சீனி, ரவை, வெங்காயம், தக்காளி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர். போலீசார் சமூக சேவைக்கு  பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News