செய்திகள்
கோப்புபடம்

கொரோனா சிகிச்சை-கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

Published On 2021-05-26 06:15 GMT   |   Update On 2021-05-26 06:15 GMT
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்ட உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறலாம். நோயாளிகள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனை டாக்டர்களின் பரிந்துரை கடிதம் தேவையில்லை.அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசே தனியார் மருத்துவமனைக்கான கட்டணத்தையும் நிர்ணயம் செய்துள்ளது.

தீவிரமில்லாத சாதாரண கொரோனா நோயாளிகளுக்கு ஏ3 முதல் ஏ6 வரையிலான தரவரிசை மருத்துவமனைகள், தினமும் ரூ. 5,000 , ஏ1 மற்றும் ஏ2 மருத்துவமனைகள் ரூ.7500 கட்டணம் பெற வேண்டும். ஆக்சிஜன் படுக்கையெனில் தினமும்  15 ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணமாக பெற வேண்டும்.அதிதீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு, தினமும் வென்டிலேட்டர் வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு தினமும் 35 ஆயிரம் ரூபாயும்,‘வென்டிலேட்டர்’ வசதியுடன் சிகிச்சை பெற்றால் 30 ஆயிரம் ரூபாயும், ஆக்சிஜன் படுக்கையில் இருந்தால் 25 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் பெற வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News