செய்திகள்
கோப்புபடம்

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கட்டணம் நிர்ணயம்

Published On 2021-05-22 06:19 GMT   |   Update On 2021-05-22 06:19 GMT
உடுமலை பகுதியில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உடுமலை:

திருப்பூர்மாவட்டம் உடுமலையில் கடந்த சில வாரங்களாகவேகொரோனா தொற்றால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் உடல்களை தகனம் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கேட்பதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினரிடம்   புகார் மனுக்கள் அளித்தனர். 

இந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

 உடுமலை நகராட்சி பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள நவீன எரிவாயு மின் மயானத்தில் நகராட்சி மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த உடல்நலம் சரி இல்லாமல் சாதாரணமாக இறந்தவர்களை மட்டும் எரியூட்டப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து இறந்த வர்களின் உடல்களை மின் மயானம் அருகே உள்ள சுடுகாட்டில் ஆழமாக குழிதோண்டி பாதுகாப்பு உபகரணங்களுடன் அடக்கம் செய்யப்படுகிறது. தொடர்ந்து இறந்தவர் களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் உடல்களை அடக்கம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. உடுமலை மக்கள் பேரவை நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டபோது, இறந்தவர்களின் உடல்களை நவீன மின்மயானத்தில் எரியூட்ட வேண்டும் என அரசு வழிகாட்டுதலை சுட்டி காட்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க மின்மயான எரிவாயு அறக்கட்டளை மூலமாக கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை எரியூட்டபடும். இதற்கு கட்டண தொகையாக ரூ.3,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அதிகபட்சமாக 5 பேர் மட்டும் வர வேண்டும். அரசு மருத்துவ ஊர்தியில் உயிரிழந்தவர்கள் உடலை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News