செய்திகள்
கோப்புப்படம்

சென்னைக்கு அடுத்தப்படியாக ஹாட்ஸ்பாட்-ஆக மாறிய கோவை: இன்று 3197 பேர் பாதிப்பு

Published On 2021-05-14 15:49 GMT   |   Update On 2021-05-14 15:49 GMT
தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 31,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சென்னையில் இன்று 6538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை கொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டமாக மாறியுள்ளது. இன்று கோவை மாவட்டத்தில் 3197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்கட்டில் 2225 பேருக்கும், கன்னியாகுமரில் 1025 பேருக்கும், மதுரையில் 1250 பேருக்கும், திருவள்ளூரில் 1410 பேருக்கும், திருச்சியில் 1224 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 140 பேருக்கும், சிவகங்கையில் 242 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டியதால், தமிழக அரசு நாளை முதல் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News