செய்திகள்
வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்

Published On 2021-05-09 10:35 GMT   |   Update On 2021-05-09 10:35 GMT
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் சென்னை வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள சண்முகசுந்தரம், சட்டம், கல்வி, சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதையடுத்து ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியானதும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ராஜினாமா செய்தார். 

இதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று வெளியிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் சென்னை வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள சண்முகசுந்தரம், சட்டம், கல்வி, சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 

2002- 2008 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1996- 2001-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்கிறார். 2015- 2017ல் சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார்.
Tags:    

Similar News