செய்திகள்
கோப்புபடம்

மதுரை கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற 3 வாலிபர்கள் கைது

Published On 2021-04-23 09:50 GMT   |   Update On 2021-04-23 09:50 GMT
மதுரை கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை:

மதுரை செக்கானூரணியை அடுத்த குமரன் கோவில்பட்டியில் சுப்பிரமணியன் கோவில் உள்ளது. இங்கு பன்னியானை சேர்ந்த பால்சாமி (வயது 79) என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு பால்சாமி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

நள்ளிரவு அங்கு 3 வாலிபர்கள் 2 மோட்டார்சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் கோவில் முன் கதவு பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றனர். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து ஊர் மக்களிடம் சென்று கூறினார்.

இதையடுத்து பொதுமக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். அவர்களை கண்டதும் கொள்ளையர்கள் தப்பி ஓட முயன்றனர்.

பொதுமக்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் செக்கா னூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் 3 கொள்ளையர்கள் மற்றும் அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை ஒப்படைக்கப்பட்டன.

போலீசாரின் விசாரணையில் அவர்கள் உசிலம்பட்டி அடுத்த கன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்த பூமிநாதன் மகன் இன்பராஜ் (வயது 19), ஒத்தவீடு தனிக்கொடி மகன் தினேஷ் (22), நடுமுதலைக்குளம் சின்னத்தம்பி மகன் அபிஷேன் (20) என்பது தெரிய வந்தது.

செக்கானூரணி போலீசார் 3 பேரையும் கைது செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News