செய்திகள்
கோப்புபடம்

பாபநாசம் அருகே ஆவணமின்றி வேனில் எடுத்து சென்ற ரூ. 60 ஆயிரம் பறிமுதல்

Published On 2021-04-01 10:40 GMT   |   Update On 2021-04-01 10:40 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உரிய ஆவணமின்றி வேனில் எடுத்து சென்ற ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் அவரது குழுவினர் தஞ்சாவூர்கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் ஜங்‌ஷன் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்,

அப்போது தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஒருவேனை சோதனையிட்டனர், அதில் பயணம் பயணம் செய்த தஞ்சாவூர் கீழவாசல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது ஜாவித் என்பவரை சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த கைப்பையில் ரூ, 60,000 ஆயிரம் இருந்ததை கண்டு பிடிக்கப்பட்டது,

மேற்படி தொகையை கொண்டு செல்வதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.60 ஆயிரத்தை பாபநாசம் தாசில்தார் முருகவேலிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்,பின்னர் அந்த தொகை பாபநாசம் சார்நிலை கருவூலத்தில் உதவி கருவூல அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது,

Tags:    

Similar News