செய்திகள்
கைது

போலீசார் விடிய, விடிய வேட்டை : நெல்லையில் 45 ரவுடிகள் கைது

Published On 2021-03-07 02:08 GMT   |   Update On 2021-03-07 02:08 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
நெல்லை:


தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதையொட்டி நெல்லை மாநகரில் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் விடிய, விடியஅதிரடி வேட்டையில் இறங்கினர். தேர்தலுக்கு இடையூறு செய்வோர் என கருதப்பட்ட 45 ரவுடிகளை கைது செய்தனர். போலீசாரின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க சிலர் தேர்தல் நடைபெறாத மாநிலங்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.

இதேபோல் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 118 பேர் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்த 215 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 60 பழைய குற்றவாளிகளிடம், தேர்தலின் போது எந்தவித இடையூறும் செய்யமாட்டேன் என்று பிணை ஆவணம் எழுதி வாங்கி உள்ளனர். மேலப்பாளையத்தில் இந்த ஆணையை மீறிய ஒருவரை போலீசார் கைது செய்து உடனடியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News