செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 நாட்களாக 100 அடியாக நீடிப்பு

Published On 2021-03-06 09:14 GMT   |   Update On 2021-03-06 09:14 GMT
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 102.49 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 183 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து 1500 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர்:

மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதிக்குட்பட்ட சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி 100 அடிக்கும் கீழாக சரிந்தது. அதன் பிறகு நவம்பர் 27-ந் தேதி அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்தை விட பாசனத்திற்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் கடந்த ஜனவரி மாதம் மேட்டூர் அணை நீர்மட்டம் 1055.98 ஆனது.

அதன்பிறகு அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில் குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது. இருப்பினும் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் குறையாமல் இருந்து வருகிறது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 102.49 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 183 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து 1500 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் இன்று வரை கடந்த 100 நாட்களாக தொடர்ந்து மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வராது என்றும் மேலும் விவசாயத்திற்கும் போதுமான தண்ணீர் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News