செய்திகள்
சட்டசபை தேர்தலையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்

ஒருவிரல் மை நமது தேசத்தின் வலிமை- பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்

Published On 2021-03-05 10:38 GMT   |   Update On 2021-03-05 10:38 GMT
சட்டசபை தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரை இளைஞர் பொதுமக்களிடம் நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மதுரை:

மதுரை பங்கஜம் காலனியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 34). தன்னார்வலரான இவர் கொரோனா காலத்தில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டார்.

தற்போது சட்டசபை தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

“ஒருவிரல் மை நமது தேசத்தின் வலிமை” “வாக்களிப்பது நமது கடமையும், உரிமையும்” என்ற வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டை அணிந்து கொண்டு பேப்பரால் மை வைக்கப்பட்ட விரல் போல உருவாக்கி அதனை கையில் அணிந்து பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவர் நின்று கொண்டு இந்த பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இது தவிர வீடு, வீடாக குடிநீர் கேன் வினியோகம் செய்து வரும் அசோக்குமார் தினமும் டி-சர்ட் அணிந்து கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து எடுத்து சொல்கிறார்.

பொதுமக்களுக்கு ஓட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வாசகங்கள் அடங்கிய 2 டி-சர்ட்டுகளை தயாரித்துள்ளேன். இந்த டி-சர்ட்டுகளை தான் தினமும் அணிந்து கேன்கள் சப்ளை செய்து வருகிறேன். பொதுமக்களிடம் தினமும் நேரடி தொடர்பில் இருப்பதால் எனது பிரசாரத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய நாள் வரை நான் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மதுரை முழுவதும் நடத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News