செய்திகள்
பணம் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் சென்னை, சேலம் வியாபாரிகளிடம் ரூ.7.80 லட்சம் பறிமுதல்

Published On 2021-03-02 09:41 GMT   |   Update On 2021-03-02 09:41 GMT
நாமக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் சென்னை, சேலம் வியாபாரிகளிடம் ரூ.7.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்:

சட்டமன்ற தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை சென்னை சதானந்தபுரத்தை சேர்ந்த சாரதி என்பவர் சேந்தமங்கலத்தில் முட்டை வாங்க லாரியில் வந்தார். அப்போது போதிய ஆவணம் இல்லாமல் அவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதே போல ராமேஸ்வரத்தில் அரிசி விற்றுவிட்டு வந்த சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த சீனிவாசனை புதுச்சத்திரத்தை அடுத்த ஏ.கே சமுத்திரத்தில் பறக்கும் படையினர் சோதனை செய்து அவரிடம் இருந்த ரூ 1.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஆண்டகளூர் கேட்டில் ராசிபுரத்தில் கோழி விற்று வந்த சேந்தமங்கலத்தை சேர்ந்த சிவாவிடம் ரூ 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியை சேர்ந்த வியாபாரி ராஜேஷ் என்பவரை மெட்டல்லா பகுதியில் சோதனை செய்த போலீசார் போதிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த. ரூ 65 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். வியாபாரிகளிடம் இன்று ஒரேநாளில் ரூ 7 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் முறைகேடாக பனம் வினியோகிப்பதையும், பணம் கொண்டு செல்வதையும் தடுக்கவே பறக்கும் படை அமைக்கப்படுகிறது.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக தேர்தல் வந்தாலே சிறு வியாபாரிகளையே அதிகாரிகள் அச்சுறுத்தி வணிகம் தொடர்பாக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்வதாக சிறுவியாபாரிகள் கூறுகின்றனர்.

தேர்தல் தேதி அறிவித்து ஓரிரு நாட்களில்யே இந்த பிரச்சினை தொடங்க்லிவிட்டதால் ஆரம்பத்திலேயே இதுபற்றிய தெளிவான முடிவுகள் எடுக்கவேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News