செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-24 08:29 GMT   |   Update On 2020-12-24 08:29 GMT
திருப்பூரில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் ஏணி மீது சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஈடுபட்டனர்.
வீரபாண்டி:

திருப்பூரில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் ஏணி மீது சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஈடுபட்டனர். கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.50 உயர்த்தியதால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் அருணாச்சலம் தலைமையில் வீரபாண்டி பஸ் நிறுத்தம் மற்றும் கல்லாங்காடு பகுதியில் ஏணி மீது கியாஸ் சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News