செய்திகள்
சிவகிரி வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடியபோது வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

சிவகிரி வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய 3 பேர் கைது

Published On 2020-11-24 13:54 GMT   |   Update On 2020-11-24 13:54 GMT
சிவகிரி வனப்பகுதிக்குள் உடும்பு வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சிவகிரி:

சிவகிரி அருகேயுள்ள வனப்பகுதிக்குள் அடிக்கடி மர்ம நபர்கள் புகுந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த 8 மாதங்களில் மட்டும் வேட்டைக்குச் சென்ற கும்பல்களை வனத்துறையினர் கைது செய்து அவர்களுக்கு ரூ.20 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில், சிவகிரி வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சிவகிரி வனரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனவர்கள் முருகன், வேந்தன், வனக்காப்பாளர்கள் ராஜூ, இம்மானுவேல், பாரதிகண்ணன், வனக்காவலர் அருண்குமார், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன், சரவணன் ஆகியோர் தேவியார் பீட் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அந்த பகுதியில் உடும்பு வேட்டையாடிய தேவிபட்டணம் மணல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 40), ஆறுமுகம் மகன் அய்யனார் (19), காமாட்சி மகன் கண்ணன் (19) ஆகிய 3 பேரை வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து அரியவகை உடும்பு பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் 3 பேரும் சிவகிரி கோர்ட்டில் நீதிபதி பிரியங்கா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News