செய்திகள்
விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நந்தி சிலையை படத்தில் காணலாம்.

அவினாசியில் கலைநயம் மிக்க நந்தி சிலை விஜயவாடாவுக்கு அனுப்பி வைப்பு

Published On 2020-11-01 09:06 GMT   |   Update On 2020-11-01 09:06 GMT
அவினாசியில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க நந்திசிலை விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள சிற்ப கலைக்கூடங்களில் கலை நயம்மிக்க சிலைகள் செதுக்கப்படுகிறது. குறிப்பாக தெய்வங்களின் சிலைகள் அற்புதமாக செதுக்கப்படுவதால், தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் ஊத்துக்குளி பகுதியில் சிலை செய்வதற்கு ஏற்ற பாறைகள் கிடைப்பதால், சிலையின் தன்மை அற்புதமாக அமைகிறது.

இந்த நிலையில்ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிரசித்தி பெற்ற நந்தீஸ்வரர் கோவிலில் பெரிய அளவில் நந்தி சிலை வைக்க கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதற்காக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஒருசிற்ப கலைக்கூடத்தில் ஆர்டர் செய்திருந்தனர். அதன்படி கடந்த 5 மாதங்களாக சிற்பி பூபதி தலைமையில் சிற்பிகள் நந்தி சிலையை வடிவமைத்தனர்.

இது குறித்து சிற்பி பூபதி கூறுகையில் “ நந்தி சிலை மிக நேர்த்தியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஊத்துக்குளியில் நீரோட்ட கல் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அந்த கல் எடுத்துவரப்பட்டு கடந்த 5 மாதங்களாக வடிவமைக்கப்பட்டது. இந்த நந்தி சிலை 12 அடி நீளமும், 8 உயரமும், 1½ டன் எடையும் கொண்டது. இந்த நந்தி சிலைக்கு வழிபாடு நடத்தி லாரி மூலம் விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.
Tags:    

Similar News