செய்திகள்
பட்டு விவசாயிகளுக்கு விலையில்லா புழுவளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.

89 பட்டு விவசாயிகளுக்கு புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள்- அமைச்சர் வழங்கினார்

Published On 2020-10-31 07:24 GMT   |   Update On 2020-10-31 07:24 GMT
நாமக்கல்லில் 89 பட்டு விவசாயிகளுக்கு ரூ.41.44 லட்சம் மதிப்பில் விலையில்லா புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு 89 பட்டு விவசாயிகளுக்கு ரூ.41.44 லட்சம் மதிப்பில் விலையில்லா புழுவளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களை வழங்கினார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு துணைதலைவர் பி.ஆர்.சுந்தரம், திருச்சி பட்டுவளர்ச்சித்துறை மண்டல துணை இயக்குனர் சந்திரசேகரன், சேலம் பட்டு வளர்ச்சித்துறை இயக்க துணை இயக்குனர் (திட்டம்) முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சித்ரா, நாமக்கல் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் முத்துப்பாண்டியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் 2019-2020-ம் ஆண்டு மாநில திட்டம் மூலம் 218.40 ஏக்கரில் மல்பரி நடவு மேற்கொண்ட 180 பட்டு விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.10,500 வீதம் ரூ.22.93 லட்சம் மல்பெரி நடவு மானியம் பெற்று பயன் அடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 75.25 ஏக்கரில் சொட்டுநீர் பாசன முறை அமைத்த 51 விவசாயிகளுக்கு ரூ.24.17 லட்சம் மானியமாக வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

அதேபோல் 1,500 சதுரஅடி பரப்பில் புழு வளர்ப்பு மனை அமைத்த 3 விவசாயிகளுக்கு தலா ரூ.82, 500 வீதம் ரூ.2.47 லட்சமும், 1,000 முதல் 1,500 சதுர அடி பரப்பில் புழு வளர்ப்பு மனை அமைத்த 35 விவசாயிகளுக்கு தலா ரூ.87, 500 வீதம் ரூ.30.62 லட்சமும், 700 முதல் 1000 சதுர அடி பரப்பில் புழு வளர்ப்பு மனை அமைத்த 24 விவசாயிகளுக்கு தலா ரூ.63,000 வீதம் ரூ.15.12 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News