செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா

Published On 2020-10-19 22:00 GMT   |   Update On 2020-10-19 22:00 GMT
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் உள்பட 36 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் நெல்லை மாநகர பகுதியில் 18 பேர், மானூர் பகுதியில் 3 பேர், பாப்பாக்குடி பகுதியில் 4 பேர், ராதாபுரம் பகுதியில் 5 பேர், களக்காடு பகுதியில் 4 பேர், சேரன்மாதேவி பகுதியில் 2 பேர் அடங்குவர். ஒரே நாளில் 49 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 166 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 545 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 205 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 740 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 7 ஆயிரத்து 434 பேர் வீடு திரும்பி உள்ளனர். 155 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 151 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 537-ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 851 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 560 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 126 பேர் இறந்து உள்ளனர்.
Tags:    

Similar News