செய்திகள்
ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-31 14:16 GMT   |   Update On 2020-07-31 14:16 GMT
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி:

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ருத்ரையன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் ராமஜெயம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், கிளை தலைவர் சக்ரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு கருவிகள், உரிய மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்கு இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்ட செலவுகளுக்கான தொகை முழுவதையும் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய மாநிலநிதிக்குழு மானியத்தை விரைவாக விடுவிக்க வேண்டும். கொரோனா பரவல் காலத்தில் ஊரகவளர்ச்சித்துறையின் பல்வேறு திட்ட பணிகளை விரைவாக முடிக்க நிர்பந்திக்கக்கூடாது. ஊரக வளர்ச்சித்துறையில் இணைஇயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் நிலை பதவி உயர்வு ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News