செய்திகள்
கோப்புபடம்

ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை - நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2020-07-21 11:59 GMT   |   Update On 2020-07-21 11:59 GMT
பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் நகையை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நாகர்கோவில்:

சுசீந்திரம் சுக்குத்தேரிபாறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்ற நாய்குட்டி சுரேஷ் (வயது 32). கடந்த 8-9-2014 அன்று கோவளம் கோட்டக்கரை பகுதியை சேர்ந்த கலிஸ்டஸ் சவுந்தர்ராஜ் என்பவரது மனைவி சகாய ஜூடி(36) கோவளம் பகுதியில் காய்கறி வாங்கிக் கொண்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ், மொபட்டில் வந்த சகாய ஜூடியை தாக்கி அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து சகாய ஜூடி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், குற்றவாளியான சுரேசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த வழக்கில் குற்றவாளியான சுரேஷ் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜராகி வாதாடினார்.
Tags:    

Similar News