செய்திகள்
தனிமைப்படுத்தப்பட்ட வார்டு - கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் 3,701 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Published On 2020-07-05 08:40 GMT   |   Update On 2020-07-05 08:40 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மொத்தம் 3 ஆயிரத்து 701 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மாவட்டத்தில் 198 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் இறந்து விட்டார். நேற்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 73 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்களின் சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அதுபோல் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி நேற்று மட்டும் 383 பேர் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு அதன்பிறகு விடுவிக்கப்படுகிறார்கள். அவ்வாறு நேற்று 153 பேர் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி மொத்தம் 3 ஆயிரத்து 701 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். நேற்று மட்டும் 642 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News