செய்திகள்
பெட்ரோல் பங்க்

16-வது நாளாக விலை உயர்வு- சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.87

Published On 2020-06-22 03:10 GMT   |   Update On 2020-06-22 03:10 GMT
சென்னையில் கடந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.33 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 8.08 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னை:

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்காமல் இருந்து வந்தன. 

82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. 16வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று, பெட்ரோல் 29 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 82.87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 50 காசுகள் அதிகரித்து 76.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கடந்த 16 நாட்களில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7.33 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 8.08 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ.79.56 ஆகவும், டீசல் விலை 58 காசுகள் உயர்ந்து ரூ.78.85 ஆகவும் விற்பனை ஆகிறது.

Tags:    

Similar News