செய்திகள்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை- செயலாளர் தகவல்

Published On 2020-06-13 07:30 GMT   |   Update On 2020-06-13 07:30 GMT
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வை தற்போது நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், சூழல் சரியானதும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி இடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு தேர்வு நிச்சயம் நடத்தப்டும். தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும். குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே போதிய இடைவெளி தரப்படும் என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவார் என்றார்.
Tags:    

Similar News