செய்திகள்
பேருந்தில் பயணம் செய்ய வழிமுறைகள்

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கத்திற்கான வழிமுறைகள் வெளியீடு

Published On 2020-05-31 07:58 GMT   |   Update On 2020-05-31 07:58 GMT
நான்கு மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழக அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் நான்கு மாவட்டங்களை தவிர்த்து (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு) மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்துகள் இயக்கத்திற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்த வதிமுறைகள் பின்வருமாறு:-

1. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அல்லது வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை துணியால் மூடியிருக்க வேண்டும்

2. ஒவ்வொரு முறையும் பேருந்து பயணம் முடியும்போது கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்

3. ஓட்டநர், நடத்துனர் கையுறை மற்றும் முகக் கவசம் அணிவது கட்டாயம். அவர்களுக்கு ஒரு பாட்டில் கிருமிநாசினி

4. பேருந்து முனையங்கள் ஒவ்வொரு நாளும் இருமுறை கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும்

5. குளிர்சாதன பேருந்துகளில் ஏ.சி. பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும்

6. பேருந்தின் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள்

7. தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை

8. பேருந்து பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும்
Tags:    

Similar News