செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு பாடல்

உலக யுத்தம் என்ற பெயரில் எழுத்தாளர் உருவாக்கிய கொரோனா விழிப்புணர்வு பாடல்

Published On 2020-05-20 11:41 GMT   |   Update On 2020-05-20 11:41 GMT
உலக யுத்தம் என்ற தலைப்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரையும் போன்று வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அதில், கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கிய இடம் பெற்றுள்ளது.  குறிப்பாக பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வகையில் பிரபல எழுத்தாளர் பொன் தமிழ், வேகமாதான் பரவுற சக்தி இருக்கு... என்னை கொல்ல மருந்துதான் எங்க இருக்கு... என்ற பாடலை உருவாக்கி உள்ளார். உலக யுத்தம் என்ற தலைப்பில் கொரோனா வைரஸ் மக்களை பார்த்து கேட்கும் வகையில் இப்பாடல் வரிகளை உருவாக்கியுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News