செய்திகள்
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோ‌ஷ வழிபாடு

Published On 2020-04-21 13:01 GMT   |   Update On 2020-04-21 13:01 GMT
தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பக்தர்கள் இன்றி நடந்த பிரதோ‌ஷ வழிபாட்டில் மகா நந்திக்கு மஞ்சள், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மாதம் பெரிய கோவில் மூடப்பட்டு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் வழக்கமாக பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று பெரிய கோவிலில் பிரதோ‌ஷ வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் இன்றி நடந்த இந்த வழிபாட்டில் மகா நந்திக்கு மஞ்சள், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

கடந்த மாதமும் பக்தர்கள் இன்றி பிரதோ‌ஷ வழிபாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News