செய்திகள்
கோப்புப்படம்

பெரியபட்டினத்தில் 16-வது நாளாக தொடர் போராட்டம்

Published On 2020-03-09 10:11 GMT   |   Update On 2020-03-09 10:11 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து 16-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கீழக்கரை:

பெரியபட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு அனைத்து சமுதாய மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இரவு நடந்த தொடர் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.

கீழக்கரையில் 7-வது நாளாக அறவழியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டு கண்டன உரையாற்றி வருகின்றனர்.

முன்னாள் வக்பு வாரிய முன்னாள் சேர்மன் ஹைதர் அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த போராட்டத்திற்கு ஏராளமான பெண்கள் ஆதரவு தெரிவித்து பங்கேற்று வருகின்றனர். கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News