செய்திகள்
தமிழ்புலவர்கள் நினைவுதூணுக்கு தமிழ் ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.

தாய்மொழி தினத்தையொட்டி தமிழ் புலவர்கள் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை

Published On 2020-02-22 17:58 GMT   |   Update On 2020-02-22 17:58 GMT
தாய் மொழி தினத்தையொட்டி தமிழ்புலவர்கள் நினைவுதூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கரூர்:

கரூரில் முன்பு வாழ்ந்த ஓதஞானியார், கரூர் கிழார், கண்ணம்பாளானார், பூதஞ்சாத்தனார் உள்ளிட்ட தமிழ் வளர்த்த புலவர்களின் நினைவாக, கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நினைவுதூண் அரசால் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தாய்மொழி தினத்தையொட்டி, கரூர் தீரன் பண்பாட்டு கழகம் சார்பில் புலவர்கள் நினைவுதூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நிர்வாகி தமிழ்சேரன் தலைமை தாங்கினார். இதில் தமிழ் ஆர்வலர்கள் கனிஓவியா, காமராஜ், நகுல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கரூர் மாவட்ட தமிழ்ஆர்வலர்களும் பரவலாக வந்து நினைவுதூணுக்கு மரியாதை செலுத்தினார்கள். அப்போது, அரசுத்துறை ஆவணங்கள் தமிழில் பராமரிக்க வேண்டும். வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். குழந்தைகளுக்கு ஆன்லைனை பார்த்து ஆங்கிலத்தில் அல்லாமல் தமிழில் பெயர் சூட்ட பலரும் முன்வர வேண் டும் என்பதைவலியுறுத்தினார்கள்.

இதே போல், கரூர் மாவட்ட திருக்குறள் பேரவை சார்பில் தாய் மொழி தினத்தையொட்டி அந்த அலுவலகத்தில், தமிழின் பெருமை குறித்து கவிதை வாசிக்கும் போட்டி நடந்தது. இதில் தமிழ் ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, “தமிழ் வாழ்க’’ என முழக்கமிட்டு சிலர் கவிதை பாடி, சிலர் தமிழின் பெருமை பற்றி பேசி நூல்களை பரிசாக பெற்றுச் சென்றனர். பேராசிரியை இளவரசி, நன்செய் புகழூர் அழகரசன், சீனிவாசபுரம் ரமணன் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கு பெற்றனர். அனைவருக்கும் திருக்குறள் பேரவை செயலாளர் தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் வெவ்வேறு தலைப்பிலான நூலையும், இனிப்பும் வழங்கினார்.
Tags:    

Similar News