செய்திகள்
தங்க நகைகள்

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்... ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் உயர்ந்தது

Published On 2020-02-21 10:24 GMT   |   Update On 2020-02-21 10:24 GMT
கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னை:

சர்வதேச சந்தை நிலவரம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த மாதம் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. 

சென்னையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாத அளவுக்கு ஒரு சவரன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின்னர் சற்று குறைந்தாலும், இந்த மாதம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து, இன்று ஒரு சவரன் 32 ஆயிரம் ரூபாயைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. 

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 32 ஆயிரத்து 96 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 4012 ரூபாயாக இருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து, 52 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை ஆனது.

அதன்பின்னர் இன்று பிற்பகல் சவரனுக்கு மேலும் 312 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.32 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு மேலும் 73 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4051-க்கு விற்பனை ஆகிறது. இதன்மூலம் ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் உயர்ந்துள்ளது, கிராமுக்கு 73 ரூபாய் உயர்ந்துள்ளது. 

வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 52 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. 
Tags:    

Similar News