செய்திகள்
கோப்பு படம்

பழனியில் 3-வது நாளாக இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2020-02-18 12:01 GMT   |   Update On 2020-02-18 12:01 GMT
சென்னை வண்ணாரபேட்டையில் தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து பழனியில் 3-வது நாளாக இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:

சென்னை வண்ணாரபேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பழனி சின்ன பள்ளிவாசல் முன்பாக ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் கடைவீதியின் இருபுறமும் போலீசார் தடுப்புக்களை அமைத்தனர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தர்ணாவை கைவிட்டனர்.

அதைத் தொடர்ந்து நேற்று சின்ன பள்ளிவாசல் உள்பகுதியில் தர்ணாவை தொடர்ந்தனர். மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து செல்வதாக தெரிவித்த நிலையில் இரவு நீண்ட நேரமாகியும் பள்ளிவாசல் முன்பு ஏராளமான பெண்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று 3-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News