செய்திகள்
வைகை அணை

வைகையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2019-12-28 09:50 GMT   |   Update On 2019-12-28 09:50 GMT
தொடர்ந்து நீர்மட்டம் சரிந்து வருவதால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
கூடலூர்:

வடகிழக்கு பருவமழை முற்றிலும் ஓய்ந்ததால் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 2 அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மழை இல்லாத சூழ்நிலையிலும் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதால் முழு பாசன தேவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்குமா? என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

எனவே வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது. நேற்று காலை 62.88 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.89 அடியாக குறைந்தது. அணைக்கு 808 கன அடி தண்ணீர் வருகிறது. நேற்று வரை 2860 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 1000 கன அடி குறைக்கப்பட்டு 1860 கன அடி தண்ணீர் மட்டுமே குறைக்கப்படுகிறது. நீர் இருப்பு 3970 மி.கன அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.45 அடியாக உள்ளது. வரத்து 181 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 3715 மி.கன அடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.60 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 80 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.31 அடி. வரத்து 31 கன அடி. திறப்பு 27 கன அடி.

Tags:    

Similar News